“தென் கொரிய அதிபர் பாராட்டியது பெருமை​யாக இருந்​தது” - பிரி​யங்கா மோகன் நெகிழ்ச்சி

“தென் கொரிய அதிபர் பாராட்டியது பெருமை​யாக இருந்​தது” - பிரி​யங்கா மோகன் நெகிழ்ச்சி
Updated on
1 min read

ரா.​கார்த்​திக் இயக்​கத்​தில், பிரி​யங்கா மோகன் நடித்த திரைப்படம் ‘மேட் இன் கொரி​யா’. கொரி​யா​வுக்​குச் செல்​லும் இளம் பெண் ஒரு​வர் அங்கு சந்​திக்​கும் பிரச்​சினை​களை மையமாகக் கொண்ட இந்​தப் படத்தை, ரைஸ் ஈஸ்ட் என்​டர்​டெயின்​மென்ட் தயாரித்​தது. நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளி​யாகி வரவேற்​பைப் பெற்​றது.

இந்​நிலை​யில் இந்​தியா வந்​துள்ள தென்​கொரிய அதிபர் லீ ஜே மியுங்​-கிற்கு மரி​யாதை செலுத்​தும் வித​மாக இந்​திய குடியரசு தலை​வர் திர​வுபதி முர்மு விருந்​தளித்​துக் கவுரவித்​தார்.

ராஷ்டிரபதி பவனில் நடை​பெற்ற இவ்​விருந்​தில் பிரதமர் நரேந்​திர மோடி மற்​றும் முக்​கியப் பிர​முகர்​கள் கலந்து கொண்​டனர். இதில் ‘மேட் இன் கொரி​யா’ கதா​நாயகி பிரியங்கா மோகனும் கலந்​து​கொண்​டார்.

இது பற்றி பிரி​யங்கா மோகன் கூறும்​போது, “இப்​படி ஒரு விருந்தில் பங்​கேற்​பேன் என்​று நினைத்​துக் கூடப் பார்க்​கவில்​லை. இவ்​வளவு முக்​கிய பிர​முகர்​கள் பங்​கேற்ற விருந்​தில் நான் கலந்துகொண்​டது அற்​புத​மான அனுபவமாக இருந்​தது.

இதில் பலரும் ‘மேட் இன் கொரி​யா’ திரைப்​படத்​தைப் பற்றிப் பேசியதும், தென் கொரிய அதிபரே படத்​தைப் பாராட்​டியதும் எனக்​குப் பெரு​மை​யாக இருந்​தது” என்​று தெரி​வித்​துள்​ளார்​.

“தென் கொரிய அதிபர் பாராட்டியது பெருமை​யாக இருந்​தது” - பிரி​யங்கா மோகன் நெகிழ்ச்சி
Ullozhukku: அன்பும் மன்னிப்பும், அஞ்சுவும் லீலாம்மாவும் | திரை தேவதைகள் 14

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in