“நடனம் என் வாழ்க்​கை​யின் ஓர் அங்கம்!” - பூர்ணா மகிழ்ச்சி

“நடனம் என் வாழ்க்​கை​யின் ஓர் அங்கம்!” - பூர்ணா மகிழ்ச்சி
Updated on: 
1 min read

நெல்​சன் திலீப் ​குமார் இயக்​கத்​தில் ரஜி​னிகாந்த் நடித்​துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்​படம் கடந்த 15-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்​று​வரு​கிறது.

‘ஜெயிலர்’ படத்​தில் தமன்னா ஆடிய ‘காவாலா’ பாடல் சூப்​பர் ஹிட்டானது. அதே போல ‘ஜெயிலர் 2’ படத்​தில் ‘அலபோலலோ’ என்ற பாடலுக்கு பூர்ணா நடனம் ஆடியுள்​ளார். மலை​யாள நடிகையான அவர், தமி​ழில், முனியாண்டி விலங்​கியல் மூன்றாமாண்டு, வேலூர் மாவட்​டம், வித்​தகன், ஜன்​னல் ஓரம், கொடிவீரன், சவரகத்தி உள்​பட பல படங்​களில் நடித்​துள்​ளார்.

அவர் கூறும்​போது, “நடனம் எப்​போதும் என் வாழ்க்​கை​யின் ஓர் அங்​கம். நடனத்​தின் மீதுள்ள ஆர்​வத்​தால்​தான் சினிமாவுக்கு வந்தேன். இப்​போது துபாயில் நடனப் பள்ளி நடத்தி வரு​கிறேன். சிறு வயது முதலே நடனமாடி வரு​கிறேன். எனது முழு சினிமா வாழ்க்​கை​யிலும், அந்​தந்த மொழிகளில் சூப்​பர் ஹிட்​டான பாடல்கள் எனக்​குக் கிடைத்​துள்​ளன. திரு​மணம் முடிந்து குழந்தைகள் பிறந்த பிறகு, ஜெயிலர் 2 படத்​தில் நடனமாடும் வாய்ப்பு கிடைக்​கும் என்று எதிர்​பார்க்கவில்லை.

எனது நடனத்​துக்​காக என்னை அங்கீகரிக்​கும் ஒரு நாளுக்​காக எப்போதும் விரும்பி இருக்​கிறேன். எல்​லாமே சரியான நேரத்​தில் நடக்​கும் என்று நம்​பு​கிறேன். ஒரு​வேளை, எனக்கு 2 குழந்​தைகள் பிறந்த பிறகு இது நிகழ வேண்​டும் என்று எழுதப்​பட்​டிருக்கலாம்.

தமன்னா ஆடிய ‘காவாலா’ பாடலுக்​கும் நான் ஆடிய ‘அலபோலலோ’ பாடலுக்​கும் ஒப்​பீடுகள் வரு​வது பற்றி கேட்கிறார்கள். அது தவிர்க்க முடி​யாதது. அது எனக்​குத் தெரியும், ஆனால் தமன்​னாவின் பாடலும் எனது பாடலும் வெவ்​வேறு ஸ்டைல். முற்​றி​லும் வேறு​பட்​டவை” என்​றார்.

“நடனம் என் வாழ்க்​கை​யின் ஓர் அங்கம்!” - பூர்ணா மகிழ்ச்சி
கேம்பிரிட்ஜ் கிரேக்க உணவகத்தில் மலர்ந்த காதல்: ராஜீவ் காந்தியுடனான முதல் சந்திப்பை நினைவுகூர்ந்த சோனியா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in