“டிஎன் 2026... யாரையும் புண்படுத்தாத அரசியல் படம்” - நடிகர் தம்பி ராமையா

“டிஎன் 2026... யாரையும் புண்படுத்தாத அரசியல் படம்” - நடிகர் தம்பி ராமையா
Updated on
1 min read

நட்டி நட்​ராஜ், ஷிரித்தா ராவ், சாந்​தினி தமிழரசன், எம்​.எஸ்​.​பாஸ்​கர், இளவரசு, தம்பி ராமையா உள்பட பலர் நடித்​துள்ள படம், ‘டிஎன் 2026’. இதன் கதையை தம்பி ராமையா எழு​தி​யுள்​ளார்.

உமாபதி ராமையா இயக்​கி​யுள்ள இப்​படத்தை கேஆர்ஜி கண்​ணன் ரவி குரூப் சார்​பில் கண்​ணன் ரவி, தீபக் ரவி தயாரித்​துள்​ளனர். ஏப்​.10-ல் வெளி​யா​கும் இப்​படத்​தின் செய்​தி​யாளர்​கள் சந்​திப்​பு, அரசி​யல் மாநாடு போல வடிவ​மைக்​கப்​பட்ட அரங்​கில், நடை​பெற்​றது. படக்​குழு​வினர் கலந்து கொண்​டனர்.

தம்பி ராமையா கூறும்​போது, “இந்​தக் கதையை அரசி​யல் பின்​னணி​யில் உரு​வாக்​கி​யுள்​ளோம். ஒரு படத்தை உரு​வாக்​கு​வது என்​பது பொறுப்​பும், உணர்ச்​சி​யும் சேர்ந்த ஒன்​று. அதில் யாருடைய மனதை​யும் புண்​படுத்​தாமல் சொல்ல வேண்​டியதைச் சொல்ல வேண்​டும். அந்த பொறுப்​புடன் இந்த படம் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. இயக்​குநர் உமாபதி இந்​தப் படத்​தின் மூலம் தன்னை நிரூபித்​துள்​ளார். இந்​தப்​படம் யாரை​யும் குறிப்​பிட்​டுப் பேச​வில்​லை, எனக்கு எல்லா கட்​சி​யிலும் நண்​பர்​கள் இருக்​கிறார்​கள்.

மேலோட்​ட​மாக கிடைக்​கும் தகவல்​களை வைத்து உடனே முடிவுக்கு வர வேண்​டாம். இந்​தப் படம் யாரை​யும் புண்​படுத்​தும் வகை​யில் எடுக்​கப்​பட​வில்​லை. யாரை​யும் சங்​கடப்​படுத்​தும் நோக்​கம் இதில் இல்​லை.

அதை நீங்​கள் படம் பார்த்த பிறகு நிச்​சய​மாகப் புரிந்து கொள்​வீர்​கள். படத்தை முழு​மை​யாகப் பார்த்த பிறகு உங்​கள் கருத்​தைச்​ சொல்​லுங்​கள்​” என்​றார்​.

“டிஎன் 2026... யாரையும் புண்படுத்தாத அரசியல் படம்” - நடிகர் தம்பி ராமையா
ஸ்​ரேயஸ் ஐயருக்கு ரூ.24 லட்சம் அபராதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in