

தனுஷ் நடித்த ‘வாத்தி’, துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. இதில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ள இப்படத்துக்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு கரா ஸ்டுடியோஸ் வழங்கும் இந்தப் படம் ஜூலை மாதம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இதன் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், 40 வயதிலும் தனது கனவுகளைத் துரத்தும் சர்வதேசத் துப்பாக்கிச் சுடும் வீரராக, சூர்யா நடித்துள்ளார். அவரை காதலிக்கும் 20 வயது பெண்ணாக மமிதா பைஜு நடித்துள்ளார். இருவருக்குமான வயது வித்தியாசம் கொண்ட வழக்கத்துக்கு மாறான காதல் கதை இதன் டீஸரில் தெரிகிறது. “பல லேயர்கள் உள்ள வேடத்தில் சூர்யா நடித்துள்ளார்.
அவருடைய ஸ்டைலான தோற்றம், கதைக்குப் புத்துணர்ச்சியை அதிகரிக்கும். மமிதா பைஜுவின் நடிப்பு, வெங்கி அட்லூரியின் வசனங்கள் என இப்படம் எமோஷனல் டிராமாவாக ரசிகர்களை ஈர்க்கும்” என்கிறது படக்குழு.