நடிகர் சத்யேந்திரா காலமானார்

நடிகர் சத்யேந்திரா காலமானார்
Updated on
1 min read

தமிழில் ஏழாவது மனிதன், மண்வாசனை, சத்​யா, கடமை கண்ணி​யம் கட்​டுப்​பாடு, 18 வயசு உள்பட பல படங்​களி​லும் சின்னத்​திரை தொடர்​களி​லும் நடித்​திருப்​பவர் சத்யேந்திரா (65). பெங்​களூரைச் சேர்ந்த இவர், தொடக்​கக் காலத்​தில் பிரபல இயக்குநர் கிரிஷ் கர்​னாட் இயக்​கிய நாடகங்​களில் நடித்​துள்​ளார்.

பின்​னர் சென்னை வந்த அவர், தமிழ் சினி​மா​வில் கவனம் செலுத்​தி​னார். கடந்த 45 ஆண்​டு​களுக்​கும் மேலாக சென்​னை​யில் வசித்து வந்த அவர் உடல் நலக்​குறை​வால் நேற்று முன் தினம் கால​மா​னார். அவருடைய இறு​திச்​சடங்கு இன்று நடக்​கிறது. சத்யேந்​திரா மறைவுக்கு திரை​யுல​கினர் இரங்​கல் தெரிவித்துள்ளனர்.

நடிகர் சத்யேந்திரா காலமானார்
Su from So: பானுவுக்காக ‘மனமிறங்கிய’ சோமேஸ்வர சுலோச்சனா | திரை தேவதைகள் 18

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in