சஸ்​பென்ஸ் த்ரில்​லர் கதையில் சந்தானம்!

சஸ்​பென்ஸ் த்ரில்​லர் கதையில் சந்தானம்!
Updated on
1 min read

நடிகர் சந்​தானம் நடிக்​கும் அவருடைய 20 வது படத்தை சுதாமன் கிருஷ்ணா இயக்​கு​கிறார். இதில் கோபிகா ரமேஷ் கதாநாயகியாக நடிக்​கிறார்.

இவர்​களு​டன் ரெடின் கிங்​ஸ்​லி, ஜார்ஜ் மரி​யான், பிரதீப் ஆண்​டனி, ஜென்​சன் திவாகர், டிஎஸ்​ஆர் மற்​றும் பவுஸி உள்​ளிட்டோர் நடிக்கிறார்​கள். வீனஸ் இன்ஃ​போடெய்ன்​மென்ட் கே.ஜே.கணேஷ், கே 7 ஸ்டூடியோஸ் விஜய் கே செல்​லையா இணைந்து தயாரிக்கின்​றனர். ரிச்​சர்ட் எம்​.​நாதன் ஒளிப்​ப​திவு செய்​யும் இப்படத்​துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசை அமைக்​கிறார்.

துப்பு துலக்​கும் நிபுணரை மையப்​படுத்​திய இக்​கதை​யில் ஹீரோ ஒரு குற்​றத்​தைக் கண்​டறிய தொடங்​கு​கிறார். இது அவரை எதிர்பா​ராத வகை​யில் சாகச​மும், சிலிர்ப்​பூட்​டும் பயணத்​தி​லும் ஆழ்த்​து​வது கதை. இந்​தப் படம் மர்​மம், சஸ்​பென்​ஸ், நகைச்​சுவை ஆகிய​வற்​றின் கலவையைக் கொண்ட புதிய கால பயணத்​தின் அடிப்​படையி​லான கதை. இதன் படப்​பிடிப்பு நடைபெற்று வருகிறது.

சஸ்​பென்ஸ் த்ரில்​லர் கதையில் சந்தானம்!
Accused: பாலியல் குற்றச்சாட்டும், ‘கெத்து’ கீதிகா அணுகுமுறை மாற்றமும் | திரை தேவதைகள் 08

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in