‘பென்ஸ்’ படத்தில் இணைந்தார் ரவி மோகன்

‘பென்ஸ்’ படத்தில் இணைந்தார் ரவி மோகன்
Updated on
1 min read

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம், ‘பென்ஸ்’. லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸின் அடுத்த படமாக உருவாகும் இதை பாக்கிய ராஜ் கண்ணன் இயக்குகிறார். இதில் நாயகனாக ராகவா லாரன்ஸும் வில்லனாக நிவின் பாலியும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ரவி மோகன் இணைந்துள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதில் சம்யுக்தா உள்பட பலர் நடிக்கின்றனர். பேஷன் ஸ்டுடியோஸ், தி ரூட், ஜி ஸ்குவாட் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.

‘பென்ஸ்’ படத்தில் இணைந்தார் ரவி மோகன்
MAI: கடந்து போகும் காதலில் ‘மய்’ பகிரும் பிரேக்-அப் பாடம் | திரை தேவதைகள் 19

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in