

நிவின் பாலி
‘பென்ஸ்’ படக்குழுவினர் மீது நிவின் பாலி அதிருப்தியில் இருப்பது தெளிவாகி இருக்கிறது.
பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்து வரும் படம் ‘பென்ஸ்’. இப்படம் எல்.சி.யூவில் வருவதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இதில் லாரன்ஸ், ரவி மோகன் மற்றும் நிவின் பாலி நடிக்க தொடங்கப்பட்டது. தற்போது மூவரும் இணைந்து படமாக்க வேண்டிய காட்சிகள் பாக்கி இருக்கிறது.
‘பென்ஸ்’ படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதே தெரியாமல் இருக்கிறது. இதனால் தனது அதிருப்தியை பேட்டியொன்றில் வெளிப்படுத்தி இருக்கிறார் நிவின் பாலி.
அவரது நடிப்பில் வெளியாகியுள்ள ‘பெத்தேலகேம் குடும்ப யூனிட்’ மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. இதற்காக அளித்த பேட்டியில் நிவின் பாலி, “‘பென்ஸ்’ படத்துக்காக போடப்பட்ட ஒப்பந்தத்தால், கடைசி 2 இரண்டு படங்களுமே ஒரே லுக்கில் நடித்துள்ளேன். அப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய் கொண்டே இருக்கிறது.
அப்படக் குழுவினரை அழைத்தாலும் எந்தவித பதிலுமே இல்லை. இந்தப் பேட்டியைப் பார்த்தாவது எனது சூழலை புரிந்துக் கொண்டு முடிவு எடுங்கள்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ‘பென்ஸ்’ படக்குழுவினர் மீது நிவின் பாலி கடும் அதிருப்தியில் இருப்பது தெளிவாகிறது.