அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்
Updated on
1 min read

நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்துள்ள படம் ‘டிஎன் 2026’. தம்பி ராமையா இதன் கதையை எழுதியுள்ளார். அவர் மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ளார். இதில், சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் நாயகிகளாக நடித்துள்ளனர்.

எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ளனர். கேஆர்ஜி கண்ணன் ரவி குரூப் சார்பில் கண்ணன் ரவி, தீபக் ரவி தயாரித்துள்ளனர். தர்புகா சிவா இசை அமைத்துள்ளார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படம், அரசியல் பகடி கலந்து, சமூக அக்கறை கருத்துகளுடன் உருவாகியுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ஏப்.10ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்
Bad Girl: நாம் ‘ரம்யா’க்கள் மீது கல் வீசியே ஆக வேண்டுமா? | திரை தேவதைகள் 11

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in