“எனக்கு திருப்புமுனையாக அமைந்தது ‘பொல்லாதவன்’ படம்” - தனுஷ்

“எனக்கு திருப்புமுனையாக அமைந்தது ‘பொல்லாதவன்’ படம்” - தனுஷ்
Updated on
1 min read

எனக்கு திருப்புமுனையாக அமைந்த படம் ‘பொல்லாதவன்’ என்று ‘கர’ விழாவில் தனுஷ் பேசியுள்ளார்.

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜு, சுராஜ் வெஞ்சுரமுடு, ஜெயராம், கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கர’.

ஏப்ரல் 30-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வு கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தனுஷிடம் ஒரு நம்பர் ப்ளேட் கொடுக்கப்பட்டது. அப்போது ஏன் என்று கேள்வி எழுந்தபோது, ‘பொல்லாதவன்’ படத்தின் தீம் மியூசிக் போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து புரிந்துக் கொண்ட தனுஷ், “என் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் ‘பொல்லாதவன்’. அதற்கு முன்பாக ஒல்லி பிச்சான், ஒல்லியாக இருக்கான் என்று கிண்டல் செய்தார்கள்.

‘பொல்லாதவன்’ படத்தில் சட்டையை கழற்றி நிற்கும் காட்சிக்கு, பயங்கர கைதட்டல் கிடைத்தது. என் உடம்புக்கு கைதட்டல் வந்ததை மறக்கவே மாட்டேன். ‘பொல்லாதவன்’ எனக்கு ஒரு ஸ்பெஷலான படம்” என்று பேசினார் தனுஷ்.

“எனக்கு திருப்புமுனையாக அமைந்தது ‘பொல்லாதவன்’ படம்” - தனுஷ்
Bulbbul: கொலையும் செய்வாள் புல்புல் | திரை தேவதைகள் 15

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in