

நடிகர் அர்ஜுன் தாஸ்
கார்த்தியின் கைதி படம் மூலம் பிரபலமானவர் அர்ஜுன் தாஸ். தொடர்ந்து மாஸ்டர், விக்ரம், அநீதி, குட் பேட் அக்லி உள்பட பல படங்களில் நடித்தார்.
அவர் நடித்துள்ள கான் சிட்டி திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியை காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது. அதை இருவரும் மறுத்தனர். இந்நிலையில் அவருக்கு நடிகை ஒருவருடன் விரைவில் நிச்சயதார்த்தம் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாயின. இதை அர்ஜுன் தாஸ் தரப்பு மறுத்துள்ளது.
“அர்ஜுன் தாஸ் திருமணம் குறித்து பரவி வரும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை. இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதற்கு முன் உண்மைத் தன்மையை சரி பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.