

வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் டிஆர் ஹீரோவாக நடித்து வரும் படம், ‘அரசன்’. ‘வடசென்னை’ சினிமாடிக் யுனிவர்ஸாக உருவாகும் இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.
இந்தப் படத்துக்குச் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் வட சென்னை செட் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில் சென்னை தரமணியில் புதிய அரங்கு அமைத்து இப்போது படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.
படப்பிடிப்பு தளத்தில் சிலம்பரசன், வெற்றிமாறன், அனிருத் ஆகியோர் சந்தித்து, படத்தின் பணிகள் குறித்து கலந்துரையாடிய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.