ரஜினி - நெல்சனின் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு நிறைவு

ரஜினி - நெல்சனின் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு நிறைவு
Updated on
1 min read

ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லீ உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் ஜெயிலர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் ரஜினி. படத்தின் ஷெட்யூல் சென்னையில் நடைபெற்ற நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமாக சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விரைவில் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து லைகா தயாரிப்பில் த.செ.ஞானவேல் இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். ரஜினியின் 171வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in