“ஐஸ்வர்யா ராயின் ஆகச் சிறந்த படம் ‘பொ.செ 2’ தான்” - அபிஷேக் பச்சன் பாராட்டு

“ஐஸ்வர்யா ராயின் ஆகச் சிறந்த படம் ‘பொ.செ 2’ தான்” - அபிஷேக் பச்சன் பாராட்டு
Updated on
1 min read

“ஒரு நடிகராக இன்றைய தேதி வரை ஐஸ்வர்யா ராயின் ஆகச் சிறந்த படம் ‘பொன்னியின் செல்வன் 2’ தான்” என்று அவரது கணவரும், நடிகருமான அபிஷேக் பச்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அபுதாபியில் நடைபெற்ற IIFA விருது நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர்கள் விக்கி கவுசல் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். இந்நிகழ்வைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகர் அபிஷேக் பச்சனிடம், ‘பொன்னியின் செல்வன் 2’ பார்த்துவிட்டு மனைவி ஐஸ்வர்யா ராயை பாராட்டினீர்களா?’ என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “ஒரு நடிகராக ஐஸ்வர்யா ராய் இதுநாள் வரை நடித்த படங்களில் ஆகச் சிறந்த படம் ‘பொன்னியின் செல்வன் 2’ என அவரிடமே நான் கூறிவிட்டேன். இது போன்ற ஒரு கதாபாத்திரத்தை கையாள்வது நம்பமுடியாத சாதனைதான். வெவ்வேறு லேயர்களைக் கொண்ட அந்தக் கதாபாத்தில் ஐஸ்வர்யா அற்புதமாக நடித்திருந்தார். அவரைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தப் படம் குறித்து பேசிய நடிகை ஐஸ்வர்யா ராய், “இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் போன்ற சிறந்த படத்தில் பணியாற்றியது திருப்தியையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in