புத்த மடாலயங்களில் படமாக்கப்பட்ட '99/66'

புத்த மடாலயங்களில் படமாக்கப்பட்ட '99/66'
Updated on
1 min read

சபரி, ரோகித் , ரக்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா, பவன் கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, பி.எல்.தேனப்பன் என பலர் நடித்துள்ள படம், "99/66 தொண்ணூற்று ஒன்பது அறுபத்தியாறு". மித்ரா பிக்சர்ஸ் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி எழுதி, இயக்கி, இசை அமைத்து, தயாரித்துள்ளார். சேவிலோ ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இதன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினருடன் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளரும் இயக்குநருமான எம்.எஸ்.மூர்த்தி கூறும்போது " சென்னையில் உள்ள 99 வீடுகள் கொண்ட ஓர் அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் இதன் கதை நடக்கிறது. நான் சினிமாவுக்கு புதியவன். எனக்குத் தெரிந்ததை வைத்து, எளிமையாகஇப்படத்தை எடுத்துள்ளேன்.

அரசு அனுமதி பெற்று தாய்லாந்து, பர்மா, இலங்கை போன்ற பகுதிகளில் புத்த மடாலயங்களின் உள்ளே சென்று ஐநூறு புத்த பிக்குகளின் மத்தியில் பாடல்களையும் சில காட்சிகளையும் பிரம்மாண்டமான முறையில்படமாக்கியுள்ளோம். படத்தில் இடம் பெறும் கிராபிக்ஸ் காட்சிகள் நவீன தொழில் நுட்பத்துடன் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது'' என்றார். இவ்விழாவில் இதே நிறுவனம் தயாரிக்கும் "ஹஸ்கி ஹவுஸ்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸரும் வெளியிடப்பட்டது.

புத்த மடாலயங்களில் படமாக்கப்பட்ட '99/66'
‘ஜனநாயகன்’ ட்ரெய்லரை பின்னுக்குத் தள்ளிய ‘பராசக்தி’ ட்ரெய்லர் - யூடியூபில் புதிய சாதனை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in