மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ படத்தின் முதல் பார்வை திங்கட்கிழமை வெளியீடு

மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ படத்தின் முதல் பார்வை திங்கட்கிழமை வெளியீடு
Updated on
1 min read

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தின் முதல் பார்வை மே 1-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில், வடிவேலு ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக நடைபெற்று, செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், படத்தின் முதல் பார்வை நாளை (மே-1) வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் படம் வரும் ஜூன் 29-ம் தேதி வெளியாகலாம் என கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in