2 பாகங்களாக உருவாகிறது சூர்யாவின் ‘கங்குவா’!

சூர்யா
சூர்யா
Updated on
1 min read

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம், 'கங்குவா'. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் இந்தி நடிகை திஷா பதானி, யோகி பாபு, ஆனந்த் ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். தேவி பிரசாத் இசையமைக்கிறார்.

3-டியில் உருவாகும் இந்தப் படம், 10 மொழிகளில் வெளியாகிறது. இதன் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இந்தப் படம் 2 பாகங்களாக வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

முதல் பாகத்தின் கிளைமாக்சில் இரண்டாம் பாகத்துக்கான லீட் ஆக இருக்கும் என்று தெரிகிறது. நவம்பரில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அடுத்த வருடத் தொடக்கத்தில் முதல் பாகம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in