குலசாமி ரிலீஸ் தேதி மாற்றம்!

குலசாமி படத்தில் விமல்
குலசாமி படத்தில் விமல்
Updated on
1 min read

விமல், தன்யா ஹோப் நடிப்பில், ‘குட்டிப்புலி’ சரவண சக்தி இயக்கியுள்ள படம், ‘குலசாமி’. சரவண சக்தியின் மகன் சூர்யா, வில்லனாக நடிக்கிறார். காவல்துறை முன்னாள் அதிகாரி ஜாங்கிட், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நடிகர் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள இந்தப் படத்துக்கு ‘வைட் ஆங்கிள்’ ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடகர் மகாலிங்கம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

சஞ்சித் சிவா ஸ்டுடியோஸ், இந்தப் படத்தை, நேற்று வெளியிட முடிவு செய்திருந்தது. இந்நிலையில் மே 5ம் தேதிக்கு ரிலீஸ் மாற்றப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in