‘சூது கவ்வும் 2’ படத்தில் சத்யராஜ், சிவா!

சூது கவ்வும் 2 போஸ்டர்
சூது கவ்வும் 2 போஸ்டர்
Updated on
1 min read

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து 2013-ம் ஆண்டு வெளியான படம், ‘சூது கவ்வும்’. பாபி சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன், முனீஸ்காந்த் உட்பட பலர் நடித்திருந்தனர். திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இதன் அடுத்த பாகம் உருவாகிறது. ‘சூது கவ்வும் 2: நாடும் நாட்டு மக்களும்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். சி.வி.குமார் தயாரிக்கும் இதில், விஜய் சேதுபதிக்குப் பதிலாக சத்யராஜ் நடிக்கிறார். மிர்ச்சி சிவா, கருணாகரன், ரமேஷ் திலக், ராதா ரவி உட்பட பலர் நடிக்கின்றனர். ‘யங் மங் சங்' படத்தை இயக்கிய அர்ஜுன் இயக்குகிறார். கார்த்திக் கே.தில்லை ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்புச் சென்னையில் தொடங்கி இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in