‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் ‘வீரா ராஜ வீர’ பாடல் சனிக்கிழமை வெளியீடு

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் ‘வீரா ராஜ வீர’ பாடல் சனிக்கிழமை வெளியீடு
Updated on
1 min read

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் ‘வீரா ராஜ வீர’ பாடல் நாளை சனிக்கிழமை (ஏப்ரல் 8) வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவானது. இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரூ.500 கோடியை வசூலித்து சாதனை படைத்தது. இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 அன்று வெளியாகிறது. கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், படத்தின் முதல் பாடலான ‘அக நக’ பாடல் கடந்த மார்ச் 20-ம் தேதி வெளியானது.இளங்கோ கிருஷ்ணன் எழுத்தில், சக்திஸ்ரீ கோபாலன் பாடிய பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து படத்தில் இடம்பெற்றுள்ள ‘வீரா ராஜ வீர’ பாடல் நாளை (ஏப்ரல் 8) மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in