‘விடுதலை பாகம் 1’ படத்தின் சிங்கிள் ஷாட் ட்ரெயின் காட்சியின் மேக்கிங் வீடியோ வெளியீடு

‘விடுதலை பாகம் 1’ படத்தின் சிங்கிள் ஷாட் ட்ரெயின் காட்சியின் மேக்கிங் வீடியோ வெளியீடு
Updated on
1 min read

வெற்றிமாறனின் ‘விடுதலை பாகம் 1’ படத்தில் சிங்கிள் ஷாட் ட்ரெயின் காட்சியின் மேக்கிங் வீடியோ வெளியிடபட்டுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடந்த மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘விடுதலை பாகம் 1’. பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், விஜய் சேதுபதி, சேத்தன், தமிழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மென்ட் மற்றும் க்ராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டது.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவரும் இப்படத்தில், ‘ஒன்னோட நடந்தா’, ‘வழி நெடுக காட்டுமல்லி’ ஆகிய இரண்டு பாடல்களும் ஹிட்டடித்தன. இந்நிலையில், ‘விடுதலை பாகம் 1’ படத்தின் தொடக்கத்தில் வரும் சிங்கிள் ஷாட் ட்ரெயின் விபத்துக் காட்சி உருவாக்கப்பட்ட விதம் குறித்த வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வீடியோ:

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in