மார்ச் 31-ல் வெற்றிமாறன் - சூரியின் ‘விடுதலை பாகம் 1’ ரிலீஸ்

மார்ச் 31-ல் வெற்றிமாறன் - சூரியின் ‘விடுதலை பாகம் 1’ ரிலீஸ்
Updated on
1 min read

வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விடுதலை பாகம் 1’ மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படம் ‘விடுதலை’. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை அமைத்து இருக்கிறார்.

அண்மையில் வெளியான படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், படம் மார்ச் 31-ல் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மார்ச் 30-ம் தேதி சிம்புவின் ‘பத்து தல’ திரைப்படமும், அதே நாளில் நானியின் ‘தசரா’ திரைப்படமும் வெளியாவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ‘விடுதலை’ ரெட்ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in