இந்தி, தெலுங்கில் ரீமேக் ஆகிறது அயோத்தி

இந்தி, தெலுங்கில் ரீமேக் ஆகிறது அயோத்தி
Updated on
1 min read

சசிகுமார், இந்தி நடிகர் யஷ்பால் சர்மா, பிரீத்தி அஸ்ரானி உட்பட பலர் நடித்து வெளியான படம், ‘அயோத்தி’. டிரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரித்த இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கி இருந்தார். மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பேசிய இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இதை அடுத்து, இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. இந்தியில் அஜய் தேவ்கன் நடிக்க இருப்பதாகவும் தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்க இருப்பதாகவும் இரண்டு மொழிக்கும் ‘அயோத்தியா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி அதிகாரபூர்வ தகவல் வெளியாக இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in