மாமனிதன் படத்துக்கு செடோனா பட விழாவில் விருது

மாமனிதன் படத்துக்கு செடோனா பட விழாவில் விருது
Updated on
1 min read

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி உட்பட பலர் நடித்த படம், ‘மாமனிதன்’. இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசை அமைத்த இந்தப் படம், பல சர்வதேச விருதுகளைக் குவித்தது. இந்நிலையில், இந்தப் படம் மீண்டும் ஒரு சர்வதேச விருதைப் பெற்றுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற 29-வது செடோனா சர்வதேசத் திரைப்பட விழாவில் இப்படம் சிறந்த உத்வேகம் தரும் திரைப்படம் என்ற விருதை வென்றுள்ளது. விருதை, இயக்குநர் சீனு ராமசாமி பெற்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in