நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் லட்சுமி மேனன் 

நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் லட்சுமி மேனன் 
Updated on
1 min read

ஆதி நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் 'சப்தம்' படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.

‘ஈரம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் அறிவழகன். இவர் அடுத்ததாக நடிகர் ஆதியுடன் கைக்கோத்து ‘சப்தம்’ படத்தை இயக்கி வருகிறார். அத்துடன் இந்தப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார்.

ஆல்பா பிரேம்ஸ் இயக்குநர் அறிவழகன் மற்றும் 7ஜி பிலிம்ஸ் சிவா இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படிப்பிடிப்பு கடந்த ஆண்டு டிச.14-ம் தேதி தொடங்கியது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தற்போது இப்படத்தில் கதாநாயகியாக லட்சுமிமேனன் இணைந்துள்ளார். ஹாரர் திரில்லராக உருவாகும் 'சப்தம்' திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in