இயக்குநர் பி.எஸ்.மித்ரன் திருமணம்

இயக்குநர் பி.எஸ்.மித்ரன் திருமணம்
Updated on
1 min read

விஷால், அர்ஜுன், சமந்தா நடித்து 2018-ம் ஆண்டு வெளியான ‘இரும்புத்திரை’ படம் மூலம் இயக்குநர் ஆனவர் பி.எஸ்.மித்ரன். அடுத்து சிவகார்த்திகேயன் நடித்த, ‘ஹீரோ’, கார்த்தி நடித்த ‘சர்தார்’ படங்களை இயக்கினார். இவர் சினிமா பத்திரிகை யாளர் ஆஷாமீரா ஐயப்பன் என்பவரைக் காதலித்து வந்தார். இவர்களுக்கு கடந்த வருடம் ஜூன் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.

இவர்கள் திருமணம் தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டையில் உள்ள கலியக் கூத்த ஐயனார் கோயிலில் நேற்று காலை நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நடிகர் கார்த்தி உட்பட திரைத்துறையினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in