Published : 05 Feb 2023 04:00 PM
Last Updated : 05 Feb 2023 04:00 PM

வெளியானது ‘வாரிசு’ படத்தின் தீ தளபதி பாடல் வீடியோ 

விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ படத்தின் தீ தளபதி பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் கடந்த ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் வசூல் ரீதியாக உலக அளவில் ரூ.300 கோடியை நெருங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தீ தளபதி லிரிக்கல் விடியோ 5.8 கோடி பார்வைகளை கடந்துள்ளது. நடிகர் சிம்பு இந்தப் பாடலை பாடியுள்ள இப்பாடலின் வீடியோ தற்போது யூடியூப்பில் வெளியாகியுள்ளது. படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

பாடல் வீடியோ:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x