ஜுன் 9-ல் வெளியாகிறது மரகத நாணயம்

ஜுன் 9-ல் வெளியாகிறது மரகத நாணயம்
Updated on
1 min read

ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியுள்ள 'மரகத நாணயம்', ஜுன் 9-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஆதி, நிக்கி கல்ராணி, ராம்தாஸ், ஆனந்த்ராஜ், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'மரகத நாணயம்'. புதுமுக இயக்குநர் ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தன. தற்போது அப்பணிகளும் முடிந்து தணிக்கையில் 'யு' சான்றிதழ் பெற்றுள்ளது.

தற்போது ஜுன் 9-ம் தேதி 'மரகத நாணயம்' வெளியாகும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in