பிப்.17-ல் வெளியாகிறது மோகன்.ஜி-யின் ‘பகாசூரன்’

பிப்.17-ல் வெளியாகிறது மோகன்.ஜி-யின் ‘பகாசூரன்’
Updated on
1 min read

இயக்குநர் மோகன்.ஜியின் ‘பகாசூரன்’ படம் வரும் பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' படங்கள் மூலம் கவனம் பெற்றவர் மோகன்.ஜி. அடுத்ததாக செல்வராகவன், நட்டி நட்ராஜ் நடிப்பில், ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள 'பகாசூரன்' படத்தை இயக்கியுள்ளார். படத்தில் ராதாரவி, கே.ராஜன் , கூல் சுரேஷ், சரவணன் சுப்பையா, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஃபரூக் பாட்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆன்லைன் ஆப்கள் மூலமாக நடக்கும் பாலியல் தொழில் குறித்த கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.

இந்நிலையில், படம் வரும் பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நாளன்று தனுஷின் ‘வாத்தி’ படமும் வெளியாகிறது. செல்வராகவன் - தனுஷ் படங்கள் ஒரேநாள் வெளியாவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in