ஃபேன்டஸி ரொமான்ஸ் கதையில் விஷ்ணு விஷால் - ‘ராட்சசன்’ இயக்குநர் தகவல்

ஃபேன்டஸி ரொமான்ஸ் கதையில் விஷ்ணு விஷால் - ‘ராட்சசன்’ இயக்குநர் தகவல்
Updated on
1 min read

‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ படங்களை அடுத்து 3-வது முறையாக நடிகர் விஷ்ணு விஷாலும் இயக்குநர் ராம்குமாரும் இணைகின்றனர். இவர்கள் இணையும் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர்.

படம் பற்றி ராம்குமாரிடம் கேட்டபோது, “எனது முந்தைய படங்களில் இருந்து வேறுவிதமாக இந்தப் படத்தை உருவாக்குகிறேன். ஜாலியான காதல் கதையை, ஃபேன்டஸியுடன் சொல்லும் படம் இது. எமோஷன் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். கதை மலைப்பகுதியில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் அல்லது ஊட்டியில் படப்பிடிப்பு நடக்கும். கதாநாயகி இன்னும் முடிவாகவில்லை. விஷ்ணு விஷால், அடுத்து ‘லால் சலாம்’ படத்தில் நடிக்க இருக்கிறார். அது முடிந்ததும் இதன் படப்பிடிப்புத் தொடங்கும்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in