எம்ஜிஆர் பிறந்தநாளில் 'சிரித்து வாழ வேண்டும்' ரீ ரிலீஸ்

எம்ஜிஆர் பிறந்தநாளில் 'சிரித்து வாழ வேண்டும்' ரீ ரிலீஸ்
Updated on
1 min read

எம்.ஜி.ஆர், லதா நடித்து கடந்த 1974-ம் ஆண்டு வெளியான படம், ‘சிரித்து வாழ வேண்டும்’. எஸ்.எஸ்.பாலன் இயக்கிய இந்தப்படத்தில் நம்பியார், மனோகர், தேங்காய் சீனிவாசன் உட்பட பலர் நடித்திருந்தனர்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். நவீன தொழில் நுட்பத்தில் டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றப்பட்டுள்ள இந்தப் படம், எம்ஜிஆர் பிறந்த தினமான ஜன. 17ம் தேதியன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in