நயன்தாராவின் ‘கனெக்ட்’ படத்துக்கு எதிர்ப்பு

நயன்தாராவின் ‘கனெக்ட்’ படத்துக்கு எதிர்ப்பு
Updated on
1 min read

நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய், ஹனியா நஃபீஸா நடித்துள்ள படம், ‘கனெக்ட்’. அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். கரோனா காலகட்டத்தில் நடக்கும் கதை. தன் மகளுக்குப் பிடித்துள்ள பேயை, நயன்தாரா எப்படி விரட்டுகிறார் என்பது படம். வரும் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

99 நிமிடங்கள் ஓடும் இந்தப்படத்திற்கு இடைவேளை இல்லை என இயக்குநர்தெரிவித்திருந்தார். இதற்குத் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கேன்டீன் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால், இடைவேளை இல்லாமல் படத்தைத் வெளியிட முடியாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர் இதனால் அவர்களே இடைவேளை விட்டுவிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in