உருவாகிறது ‘ஜெய் பீம் 2’

உருவாகிறது ‘ஜெய் பீம் 2’
Updated on
1 min read

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த படம், ‘ஜெய் பீம்’. அமேசான் தளத்தில் வெளியான இதில் லிஜோ மோள், மணிகண்டன் உள்பட பலர் நடித்திருந்தனர். வரவேற்பைப் பெற்ற இந்தப்படம், பல பட விழாக்களில் விருதுகளையும் வென்றுள்ளது.

இந்நிலையில் கோவாவில் நடந்தஇந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டது. பின்னர் பேசிய இயக்குநர் ஞானவேல், சூர்யாவுக்கு நன்றி தெரிவித்தார்.

“இந்தப் படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று சூர்யாவிடம் கேட்டபோது, சந்துரு கேரக்டரில் தானே நடிப்பதாகக் கூறினார்” என்றார். இதன் அடுத்த பாகம் உருவாகுமா? என்று கேட்கப்பட்டது. “கண்டிப்பாக உருவாகும்” என்று தயாரிப்பாளர் ராஜசேகர் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in