கொத்தடிமை முறை, அதிகார வர்க்கத்தின் ஆதிக்கம் - ‘ரத்தசாட்சி’ டீசர் எப்படி?

கொத்தடிமை முறை, அதிகார வர்க்கத்தின் ஆதிக்கம் - ‘ரத்தசாட்சி’ டீசர் எப்படி?
Updated on
1 min read

இயக்குநர் ரஃபிக் இஸ்மாயில் இயக்கியுள்ள ‘ரத்தசாட்சி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. வித்தியாசமான இந்த டீசர் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

எழுத்தாளர் ஜெயமோகனின் கதையை அடிப்படையாக கொண்டு இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில் திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘ரத்தசாட்சி’. கண்ணா ரவி, இளங்கோ குமரவேல், ஹரிஷ் குமார், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் வினோத், ஆறு பாலா நடித்துள்ள இப்படத்தை அனிதா மகேந்திரன் மற்றும் டிஸ்னி.எஸ் இணைந்து தயாரித்துள்ளனர். ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

டீசர் எப்படி? - தெறிக்கும் ரத்தத்துடன் தொடங்கும் இந்த டீசர், கொத்தடிமை முறை, நிலப்பிரபுத்துவ ஆதிக்கம் என அடர்த்தியான கதைக்களத்துடன் விரிகிறது. ‘எங்க காலத்துல நாங்க முழு கூலிய நாங்க வாங்குனதே இல்ல’, ‘உரிமைகள நம்ம தான் கேட்டு வாங்கணும்’, ‘இருக்குறவன் இல்லாதவன அடிச்சா ஆண்டவனா இருந்தாலும் அடி தான்; அதான் நமக்கு தெரிஞ்ச கம்யூனிசம்’ என வசனங்கள் கவனம் பெறுகின்றன. ஒட்டுமொத்த டீசரும் கதையின் சூட்டை அப்படியே கடத்தும் வகையில் கச்சிதமாக வெட்டப்பட்டிருக்கிறது. படம் விரைவில் வெளியாக உள்ளது. டீசர் வீடியோ:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in