விஷ்ணு விஷாலின் புதிய படம் கதாநாயகன்

விஷ்ணு விஷாலின் புதிய படம் கதாநாயகன்
Updated on
1 min read

புதுமுக இயக்குநர் முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து வரும் படத்துக்கு 'கதாநாயகன்' எனப் பெயரிட்டு இருக்கிறார்கள்.

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்திபன் நடிப்பில் உருவாகி இருக்கும் 'மாவீரன் கிட்டு' படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அப்படத்தில் தனது பணிகள் முடிவுற்றதைத் தொடர்ந்து தான் தயாரித்து வரும் படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் விஷ்ணு விஷால்.

இப்படத்தை புதுமுக இயக்குநர் முருகானந்தம் இயக்கி வருகிறார். கத்ரீன் தெரசா, சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

பெயரிடப்படாமல் நடைபெற்று வந்த இப்படத்துக்கு 'கதாநாயகன்' என பெயரிட்டு இருக்கிறார்கள். பாண்டியராஜன் நடிப்பில் வெளியான 'கதாநாயகன்' படத்தின் தயாரிப்பாளரிடமிருந்து தலைப்புக்கான உரிமையை வாங்கி தங்களுடைய படத்துக்கு சூட்டியிருக்கிறது படக்குழு.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in