ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ரஜினி

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ரஜினி
Updated on
1 min read

லைகா நிறுவனத்துடன் ரஜினி 2 படங்களில் நடிக்க ஒப்பந்தம் போட்டுள்ள நிலையில், நாளை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்திற்கான பூஜை நடைபெறுகிறது. இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

'பீஸ்ட்' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன், நடிகர் ரஜினியுடன் கைகோத்துள்ளார். 'ஜெயிலர்' என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்திற்கு நெல்சனுடன் இணைந்து கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை எழுத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், விநாயகன் நடிக்கும் இப்படத்தில் நாயகியாக தமன்னா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. , இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து அடுத்த இரண்டு படங்களில் நடிக்க உள்ளதாக ஒப்பந்தம் செய்துள்ளார். அதில் ஒரு படத்திற்கான பூஜை நாளை சென்னையில் நடைபெறுகிறது. இந்தப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க இருப்பதாகவும், அதில் நடிகர் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் விஷ்ணுவிஷால் நாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in