ஜெயம் ரவி - நயன்தாரா நடிக்கும் ‘இறைவன்’ படப்பிடிப்பு நிறைவு

ஜெயம் ரவி - நயன்தாரா நடிக்கும் ‘இறைவன்’ படப்பிடிப்பு நிறைவு
Updated on
1 min read

ஜெயம்ரவி - நயன்தாரா இணைந்து நடிக்கும் 'இறைவன்' படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்தது. படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது.

'வாமனன், 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் 'இறைவன்'. நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். 'தனி ஒருவன்' படத்திற்கு பிறகு ஜெயம் ரவியும், நயன்தாராவும் மீண்டும் இந்தப் படத்திற்காக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில், இன்றுடன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. ஜெயம் ரவியின் ‘அகிலன்’ படத்திற்கு பிறகு அடுத்த ஆண்டு வெளியிட முடிவு செய்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in