தமிழ் சினிமா
நவ.11-ல் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘டிரைவர் ஜமுனா’ ரிலீஸ்
ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் 'டிரைவர் ஜமுனா' படம் நவம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'வத்திக்குச்சி' படத்தின் இயக்குநர் கிங்ஸ்லின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. 18 ரீல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஆர்.ராமர் படத்தொகுப்பு செய்கிறார்.
க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் கேப் (cab) டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். அண்மையில் படத்தின் ட்ரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், படம் வரும் நவம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
