“ஐஸ்வர்யா ராய் எனக்கு சிறந்த நண்பர்” - இயக்குநர் மணிரத்னம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

மும்பை: “ஐஸ்வர்யா எனக்கு சிறந்த நண்பர், அன்பானவர்” என்று இயக்குநர் மணிரத்னம் கூறியுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ திரைப்படம் பிரமாண்ட வெற்றி பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா, த்ரிஷா, கார்த்திக், ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் நடிகை ஜஸ்வர்யாவின் நடிப்புத் திறமை குறித்து இயக்குநர் மணிரத்னம் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர், “ஜஸ்வர்யாவுடன் பணிபுரிந்த முதல் நாள், முதல் காட்சி நினைவிருக்கிறது. அவர் சிறந்த நடிகை. அவருக்கு அவருடைய அனைத்து வரிகளும் நினைவிருக்கும். ஐஸ்வர்யாவின் முதல் படமான ‘இருவர்’ ஓர் எளிதான பாத்திரம் அல்ல, அந்தப் படத்தில் அவருக்கு இருவிதமான கதாபாத்திரங்கள் இருந்தன. இரண்டையும் அவரால் போதுமான நம்பிக்கையுடன் செய்ய முடிந்தது. அது எப்போது அவருடன் இருந்தது.

அவர் எனக்கு சிறந்த நண்பர். அன்பானவர். அவர் கடினமான உழைப்பாளி. அவர் தன்னால் முடிந்த அனைத்தையும் தனது கதாபாத்திரத்திற்கு அளிப்பார்” என்று மணிரத்னம் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in