தயாரிப்பில் தீவிரம் காட்டும் இயக்குநர் பாரதிராஜா

தயாரிப்பில் தீவிரம் காட்டும் இயக்குநர் பாரதிராஜா
Updated on
1 min read

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநரான பாரதிராஜா தொடர்ச்சியாக மூன்று படங்களைத் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார். அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மனோஜ், கார்த்திகா நடிப்பில், பாரதிராஜா இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'அன்னக்கொடியும் கொடிவீரனும்'. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க பாரதிராஜாவே தயாரித்தார். இப்படம் போதிய வரவேற்பை பெறவில்லை.

அதனைத் தொடர்ந்து 'பாண்டியநாடு' படத்தில் விஷாலுக்கு அப்பாவாக நடித்தார். அவரது நடிப்பிற்கு பாராட்டுக்களும், விருதுகளும் கிடைத்தன.

இந்நிலையில் தொடர்ச்சியாக மூன்று படங்களைத் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார் பாரதிராஜா. அகத்தியன் இயக்கத்தில் சேரன், சமுத்திரக்கனி நடிக்கவிருக்கும் படம், 'சலீம்' இயக்குநர் நிர்மல் குமார் இயக்கவிருக்கும் படம் மற்றும் பாரதிராஜாவின் அடுத்த படம் என ஒரே நேரத்தில் மூன்று பட வேலைகளும் நடந்து வருகிறது.

'சலீம்' இயக்குநர் நிர்மல் குமார் இயக்கவிருக்கும் படத்தில் நடித்து, தயாரிக்க இருக்கிறார் பாரதிராஜா. பாரதிராஜா இயக்கவிருக்கும் படத்தில் யார் நடிக்கவிருக்கிறார்கள் என்பது முடிவாகவில்லை.

இம்மூன்று பட வேலைகள் மற்றும் தான் தொடங்கவிருக்கும் நடிப்புப் பயிற்சி பள்ளி வேலைகள் என பாரதிராஜா பிஸியாக இருக்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in