அக்டோபர் 20-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் கணம்

அக்டோபர் 20-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் கணம்
Updated on
1 min read

சர்வானந்த் நடித்துள்ள கணம் திரைப்படம் அக்டோபர் 20-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் ஸ்ரீகார்த்தி இயக்கத்தில் சர்வானந்த் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'கணம்'. எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படத்தில் ரித்து வர்மா நாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமலா நடிக்கும் இப்படத்தில் சதீஸ், ரமேஷ் திலக், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் இந்த படம் கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தெலுங்கில் 'ஒகே ஒக்க ஜீவிதம்' என்ற பெயரில் படம் வெளியானது. ஜேக்ஸ் பெஜாய் இசையமைத்துள்ள இந்த படம் ரசிகர்களிடையே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், அக்டோபர் 20-ம் தேதி சோனி லிவ் ஓடிடியில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in