ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் வீரன் படப்பிடிப்பு நிறைவு

வீரன் படக்குழு
வீரன் படக்குழு
Updated on
1 min read

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் 'வீரன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'சிவகுமாரின் சபதம்' 'அன்பறிவு' படங்களைத் தொடர்ந்து 'ஹிப்ஹாப் தமிழா' ஆதி நடிக்கும் புதிய படம் 'வீரன்'. இயக்குநர் சரவணன் இயக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலீம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஆதிரா ராஜ் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில், முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஃபேன்டஸி காமெடி, ஆக்‌ஷன் என்டர்டெய்னராக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. 'ஹிப் ஹாப்' ஆதி படத்திற்கு இசையமைக்க, தீபக் டி.மோகன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. விரைவில் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in