தமிழில் வருகிறது கோஸ்ட்

தமிழில் வருகிறது கோஸ்ட்
Updated on
1 min read

நாகார்ஜுனா இன்டர்போல் அதிகாரியாக நடித்துள்ள ஆக்‌ஷன் த்ரில்லர் படம் ‘இரட்சன் - தி கோஸ்ட்’. பிரவீன் சத்தாரு இயக்கத்தில், ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் நார்த்ஸ்டார் என்டர்டெய்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

பான் இந்தியா முறையில் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் தெலுங்கில் ‘கோஸ்ட்’ என்ற பெயரில் வெளியாகிறது. சோனல் சவுகான், குல் பனாக், அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். முகேஷ் ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப்படம் வரும் 5-ம் தேதி வெளியாகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in