பிரபல நடிகை சபர்ணா தற்கொலை? - அடுக்கு மாடியில் சடலம் மீட்பு

பிரபல நடிகை சபர்ணா தற்கொலை? - அடுக்கு மாடியில் சடலம் மீட்பு
Updated on
1 min read

பிரபல நடிகை சபர்ணா தனது அடுக்கு மாடி குடியிருப்பில் சடலமாக கிடந்தார். அவரது இறப்பு குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவையை சேர்ந்தவர் சபர்ணா. சின்னத் திரையில் தொகுப்பாளி னியாக அறிமுகமானவர். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர். தொடர்ந்து சினிமாவில் நடித்தார்.

‘அள்ளி தந்த வானம்’ உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். ‘படிக்காதவன்’, ‘பிரிவோம் சந்திப்போம்’, ‘காளை’, ‘பூஜை’ உட்பட பல திரைப்படங் களில் கதாநாயகியின் தோழியாக நடித்துள்ளார். தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டதாக அவரே ஒருமுறை பேட்டியில் கூறியுள்ளார்.

பெற்றோர் மாப்பிள்ளை பார்ப் பதாகவும், அவரையே திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் சபர்ணா சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தார். மதுரவாயலில் வசித்து வந்தார். அவரது வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து மதுரவாயல் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த போலீஸார் சபர்ணா வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, அங்கு அவர் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். வலது கையில் காயம் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனவே, அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீ ஸார் சந்தேகிக்கின்றனர். அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in