ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ படப்பிடிப்பு நிறைவு

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ படப்பிடிப்பு நிறைவு
Updated on
1 min read

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நகைச்சுவை நாயகியாக நடித்திருக்கும் 'சொப்பன சுந்தரி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

'லாக்கப்' படத்தை இயக்கிய ஜி.சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் டார்க் காமெடி படம் 'சொப்பன சுந்தரி'. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் நடிகைகள் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல் நடிக்கின்றனர். மேலும் கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட், ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்யும் படத்தின் முதல் பார்வை அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர். தற்போது இந்தப் படத்தின் இறுதி கட்டப் பணிகள் தொடங்கி இருக்கின்றன. விரைவில் டீசர் மற்றும் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in