புதுமுக இயக்குநர் வெங்கட் - ஜி.வி.பிரகாஷ் இணையும் 4ஜி

புதுமுக இயக்குநர் வெங்கட் - ஜி.வி.பிரகாஷ் இணையும் 4ஜி
Updated on
1 min read

புதுமுக இயக்குநர் வெங்கட் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவிருக்கும் படத்துக்கு '4ஜி' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

'கடவுள் இருக்கான் குமாரு', 'ப்ரூஸ்லீ' படங்களைத் தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கும் படம், 'அடங்காதே', சசி இயக்கத்தில் உருவாகும் படம் ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியீட்டு தேதியை அறிவிக்க இருக்கிறது படக்குழு.

தற்போது சி.வி.குமார் தயாரிக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வெங்கட் இப்படத்தினை இயக்கவிருக்கிறார். சதீஷ் மற்றும் சுரேஷ் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.

'4ஜி' என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. மேலும், நாயகி தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in