தமிழுக்கு வருகிறார் ஷ்ரத்தா தாஸ்

தமிழுக்கு வருகிறார் ஷ்ரத்தா தாஸ்
Updated on
1 min read

மினர்வா பிக்சர்ஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரித்துள்ள படம், ’அர்த்தம்’. மணிகாந்த் தல்லகுடி இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் ஷ்ரத்தா தாஸ் நாயகியாக நடித்துள்ளார். மாஸ்டர் மகேந்திரன், அஜய், ஆமணி, சாஹிதி, பிரபாகர், ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் ஷ்ரத்தா தாஸ் பேசும்போது, ’’இதுவரை, இந்தி, தெலுங்கு, ஆங்கிலம், வங்காளம், மலையாள மொழிகளில் சுமார் 40 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். தெலுங்கில் பல படங்களில் கிளாமர் கேரக்டர்களில் நடித்திருக்கிறேன்.

இந்தப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புள்ள கதாபாத்திரம் கிடைத்துள்ளது. இதில் மனநல மருத்துவராக நடித்திருக்கிறேன். மனநல மருத்துவத்தில் பட்டம் பெற்றிருப்பதால் இதில் நடிப்பது எளிதாக இருந்தது. இந்தப் படம் மூலம் தமிழுக்கு வருவதில் மகிழ்ச்சி’’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in