ஐமேக்ஸில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’

ஐமேக்ஸில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’
Updated on
1 min read

'பொன்னியின் செல்வன் பாகம் 1' திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்துடன் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை படமாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.

அண்மையில் வெளியான படத்தின் ட்ரெய்லரும், 'பொன்னி நதி பாக்கணுமே' பாடலும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை ஐமேக்ஸ் தொழில்நுட்பத்துடன், ஐமேக்ஸ் திரையரங்குகளில் கண்டுகளிக்கலாம் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், ஐமேக்ஸில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in