மோகன் ஜி-யின் ‘பகாசூரன்’ படிப்பிடிப்பு நிறைவு - செப்டம்பரில் வெளியிட திட்டம்

மோகன் ஜி-யின் ‘பகாசூரன்’ படிப்பிடிப்பு நிறைவு - செப்டம்பரில் வெளியிட திட்டம்
Updated on
1 min read

மோகன் ஜி இயக்கியுள்ள 'பகாசூரன்' படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நாயகனாக நடிக்கும் படம் 'பகாசூரன்'. இந்தப் படத்தில் நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தவிர ராதாரவி, கே.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி, சசிலையா ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக தாராக்‌ஷி நடித்துள்ளார்.

படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். 'பழைய வண்ணாரப்பேட்டை' , 'ருத்ரா தாண்டவம்' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி சேலத்தில் தொடங்கியது. நேற்றுடன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தது என்பதை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படத்தை செப்டம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in