25 ஆண்டுகளுக்கு பிறகு லியோனி

25 ஆண்டுகளுக்கு பிறகு லியோனி
Updated on
1 min read

லைகா புரொடக்‌ஷன்ஸ் வழங்க, சூப்பர் டாக்கீஸ் சமீர் பரத்ராம் தயாரித்துள்ள படம் ‘பன்னிக்குட்டி’. இதில் கருணாகரன், யோகிபாபு, லட்சுமி பிரியா, ஸ்வாதிகா, சிங்கம் புலி, ராமர், தங்கதுரை உள்ளிட்டோருடன், தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவரான திண்டுக்கல் ஐ.லியோனியும் நடித்துள்ளார். கே இசையமைத்துள்ள இப்படத்துக்கு சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனுசரண் இயக்கியுள்ள இப்படம் வரும் 8-ம் தேதி வெளியாகிறது.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ஐ.லியோனி பேசியபோது, ‘‘25 ஆண்டுகளுக்கு முன்பு அருண் விஜய், வடிவேலுவுக்கு அப்பாவாக ‘கங்கா கவுரி’ என்ற படத்தில் நடித்தேன். பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. ‘சிவாஜி’ படத்தில் ரஜினிக்கு மாமனாராக நடிக்கும் வாய்ப்பும் வந்தது. பள்ளி ஆசிரியராக இருந்ததால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதன்பிறகு இப்படத்தில் நடித்துள்ளேன். எனக்கு ஒரு விதமான சாமியார் கதாபாத்திரத்தை இயக்குநர் அனு சரண் கொடுத்துள்ளார். இப்படத்தில் நல்ல மெசேஜ் இருக்கிறது’’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in